பிகில்: விஜய் குறித்த முக்கிய அப்டேட் - ரசிகர்கள் ஹேப்பி!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் முதல் முறையாக விஜய் ‘பிகில்’ படத்தில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளார்.

பிகில்: விஜய் குறித்த முக்கிய அப்டேட் - ரசிகர்கள் ஹேப்பி!
பிகில்
  • News18
  • Last Updated: August 13, 2019, 7:23 PM IST
  • Share this:
பிகில் படத்தில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெர்சல், சர்கார் படங்களைத் தொடர்ந்து பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் முதல் முறையாக விஜய் ‘பிகில்’ படத்தில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளார்.

சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டு வந்த நிலையில், இன்றுடன் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தொழில்நுட்ப பணிகள் ஒருபக்கம் அசுர வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் அனைத்து பணிகளையும் அடுத்த மாதத்திற்குள் முடித்து புரமோஷன் வேலைகளில் ஈடுபட படக்குழு திட்டமிட்டுள்ளது.

வீடியோ பார்க்க: நேர்கொண்ட பார்வை படத்தின் வியாபாரச் சிக்கல் தீர்ந்தது எப்படி?

First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...